தண்டையார்பேட்டையில் `எங்கே எனது வேலை’ பிரசார பயணம்: நல்லகண்ணு தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், `எங்கே எனது வேலை’ என்ற பெயரில் பிரசார பயணத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமான அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், ஒன்றிய அரசு பணிகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பவும், பகத்சிங் வேலை உறுதியளிப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, `எங்கே எனது வேலை’ என்ற பிரசார பயணம் பகத்சிங் பிறந்த நாளை முன்னிட்டு, தண்டையார்பேட்டை ஜீவா பூங்காவில் இருந்து தொடங்கப்பட்டது. இதை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பிரசார பயணம் ஏப்ரல் 2ம்தேதி திருச்சியில் முடியும். அங்கு எழுச்சி மாநாடு நடக்கிறது.

ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்து, இதுவரை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை. இதை கண்டிக்கும் விதமாக `எங்கே எனது வேலை’ என்ற பெயரில் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரசார பயணம் தண்டையார்பேட்டையில் தொடங்கியது. மத்திய சென்னை, தென்சென்னை, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துண்டு பிரசாரங்கள் வழங்கப்படும்.  இந்நிகழ்ச்சியில், மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், வேம்புலி கவுன்சிலர் ரேணுகா, முன்னாள் மாவட்ட செயலாளர் மூர்த்தி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கலந்து கொண்டனர்.

Related Stories: