உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்

திருவள்ளூர்: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி.சா.மு.நாசர், மாநில ஆதிதிராவிட நல அணி செயலாளர் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் ஆலோசனையின் பேரில் அகரமேல்  ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கே.சங்கர் தலைமை தாங்கினார். துணை தலைவர் புவனேஸ்வரி ஞானம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பூந்தமல்லி ஒன்றிய குழு பெருந்தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஏ.ஜி.ரவி, ஒன்றிய குழு உறுப்பினர் வி.கன்னியப்பன், எம்.வெங்கடேசன், தருமன், ஜி.ஞானம் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதிக்கப்பட்டது. ஊராட்சி முழுவதும் சுத்தமான குடிநீர் வழங்குவது குறித்து உறுதி செய்யப்பட்டது. சிறுதானிய உற்பத்தி மற்றும் அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அரசின் திட்டப் பணிகள் குறித்தும் தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

Related Stories: