திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது: மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ விடுத்துள்ள செய்திக் குறிப்பு:  திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று 24 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் திருவள்ளூர் ஐ.ஆர்.என். திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிட பக்தன் தலைமையில் நடைபெறுகிறது. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, திருத்தணி எம்.பூபதி, மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிஷேசன், ஓ.ஏ.நாகலிங்கம், டாக்டர் வி.சி.ஆர்.குமரன், சி.ஜெயபாரதி, உதயமலர் பாண்டியன், மிதுன்சக்கரவர்த்தி, ப.சிட்டிபாபு, எஸ்.கே.ஆதாம். வி.கிஷோர், கே.எம்.சுப்பிரமணியம், ராஜேஸ்வரி ரவீந்திரநாத் ஆகியோர் முன்னிலையில் வகிக்கின்றனர். திருவள்ளூர் நகர  செயலாளர் சி.சு.ரவி சந்திரன் வரவேற்புரையற்றிகிறார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் தமிழக முதல்வர், தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பாக திருவள்ளூர் மற்றும் திருத்தணி இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் கணிசமான உறுப்பினர்கள் சேர்ப்பது, அனைத்து பூத்களுக்கும் பூத் கமிட்டி அமைப்பது, திமுக ஆட்சியின் சாதனைகளை வீடுவீடாக சென்று துண்டு பிரசுரம் விநியோகித்து திண்ணைப் பிரச்சாரம் செய்வது, சமூக வளைதள பணிகளை கிளை கழகம் முதல் மாவட்ட கழகம் வரை அனைவரும் தீவிரமாக செயல்படுவது, சார்பு அணிகளை உடனடியாக அமைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதால், கூட்டத்தில் ஒன்றிய, நகர பேரூர், கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப் பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: