பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களின் பிரதிநிதியாக முதல்வர் திகழ்கிறார்: அமைச்சர் பேச்சு

சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மக்கள் முதல்வரின் மனிதநேயத்திருநாள் `அன்பே ஆன்மீகம் அதுவே தமிழ்ஞானம்’ எனும் நிகழ்ச்சி, எழும்பூர் தெற்கு பகுதி செயலாளர் வி.சுதாகர் தலைமையில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், எழும்பூர் ரித்தர்டன் சாலையில் உள்ள பி.கே.என் மஹாலில் நேற்று நடைபெற்றது. இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது: மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என ஒவ்வொரு திட்டத்தையும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் போல், மக்களுக்கு நல்ல திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார். நமக்கு என்ன தேவை என்று அவரே சிந்தித்து செயல்படுத்துபவர் கலைஞர். சொன்னதையும் செய்வார், சொல்லாததையும் செய்வர் நம் தலைவர். மகத்தான திட்டங்கள் எல்லாம் கலைஞர் கொண்டு வந்தார்.

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் ஒட்டுமொத்த உருவமாக முதல்வர் உள்ளார். இதுவரை அறநிலையத்துறை எங்கு இருந்தது என தெரியவில்லை, இப்போது கோடிக்கணக்கில் சொத்துக்களை அறநிலையத்துறையின் மீட்டுள்ளனர். தாய்மார்களுக்கு தான் குடும்ப கஷ்டம் தெரியும், அதனால், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1000 செப்டம்பர் மாதம் முதல் கொடுக்கப்பட உள்ளது. இதன்மூலம் தாய்மார்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியினை தேசமங்கையர்க்கரசி தொகுத்து வழங்கினார்.

Related Stories: