×

ஆலை விபத்தை தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம், குருவிமலை அருகே உள்ள வளத்தோட்டப் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் மரணமடைந்துள்ளனர். 18 பேர் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுயலாபம் பார்க்கும் பட்டாசு ஆலை உரிமையாளர்களும், ஊழலுக்கு இரையாகும் தொழிற்சாலை ஆய்வு அலுவலர்களும் மனித உயிர்கள் பலியாவதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதற்கு தகுந்த பாதுகாப்பு விதிமுறைகள் உருவாக்கப்பட்டு சட்டமும் மேம்படுத்தப்பட வேண்டும். தற்போது பட்டாசு ஆலைவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு, உதவியும், மறுவாழ்வு ஏற்பாடுகளும் செய்து தரவேண்டும். படுகாயம் அடைந்தவர்களைக் காப்பற்ற அவர்களுக்கு உயர்சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்வதுடன் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Tags : Mutharasan , Decisive action needed to prevent plant accidents: Mutharasan insists
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...