×

ரூ.20 கோடி மதிப்புள்ள பள்ளியை தனியார் கல்வி நிறுவனம் அரசுக்கு தானம் பள்ளியை கலெக்டர் தொடங்கி வைத்தார்

ஆவடி: தனியார் கல்வி நிறுவனம் ரூ. 20 கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த தனியார் பள்ளி அரசுக்கு தானம் செய்யப்பட்ட நிலையில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார். ஆவடி அடுத்து மோரை ஊராட்சிக்கு உட்பட்டது வீராபுரம் கிராமம்.  இங்கு தனியார் கல்லூரி நிர்வாகம் பள்ளியை நடத்தி வந்தது.  இந்த தனியார் பள்ளி கூட கட்டிடம் கடந்த 10 வருடத்துக்கு முன் 34 அறைகள், ஆய்வுக்கூடம், கழிவறை வசதி, சுத்தமான குடிநீர் வசதி, விளையாட்டு மைதானம் என பல்வேறு அம்சங்களுடன் கட்டப்பட்டது. இது  சரி வர பராமரிப்பின்றி மாணவர்கள் வருகை குறைவாக இருந்ததால், நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தது.

இதில், இந்த தனியார் பள்ளியை நடத்த இந்த கல்வி நிறுவனம் பெருளாதார ரீதியாக  நீண்ட காலமாக அவதிப்பட்டும்  வந்தது. இந்நிலையில், இந்த தனியார் கல்வி நிறுவனம் அரசுக்கு தானமாக கொடுக்க முடிவும் செய்தது. இந்நிலையில், வீராபுரம் பகுதிகளில் நடுநிலை பள்ளியாக ஒன்று இயங்கி வந்தது. இந்த பள்ளியில் ஆறு அறைகள் மட்டுமே உள்ளது. கடந்த வருடம் தரம் உயர்த்தப்பட்டு, ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை  உயர்நிலை பள்ளியாக மாற்றப்பட்டு மாணவர்களுக்கு  படிப்பதற்கு 6 அறைகள் வசதி மட்டுமே இருந்தன.  553 மாணவ மாணவிகள் பயின்று வந்தனர். இருப்பினும், போதிய வசதிகள் எதுவும் இல்லாமல் தவித்து வந்தனர்.

எனவே, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் வசதிகள் இல்லை எனவே எங்களுக்கு வசதி வாய்ப்பு ஏற்படுத்தி தரும்படி கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், ரூ.20 கோடி  மதிப்புள்ள 2 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கி வந்த இந்த தனியார் பள்ளி ,அரசுக்கு தானமாக கொடுத்தநிலையில் அரசும் கையகப்படுத்தியது.  எனவே, பள்ளி மாணவ மாணவிகளின் நலனைக் கருதில் கொண்டு அரசு  இப்பள்ளியை ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.திவாகர் தலைமையில் நேற்று கலெக்டர்  ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்.

இப்பள்ளியில், வெள்ளானூர், மோரை, பாண்டீஸ்வரம் உள்ளிட்ட சுற்றுவட்டார  கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பயின்று  வருகின்றனர். மாணவர்களுக்காக  போக்குவரத்து வசதிகளை செய்து தருவதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் வில்லிவாக்கம் வடகிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.தயாளன், மாவட்ட கவுன்சிலர் மோரை மு.சதீஷ்குமார்,  முதன்மைக்கல்வி அலுவலர் திருவள்ளூர் மாவட்ட த.ராமன், பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் உமாமகேஸ்வரி வாழ்த்துரை வழங்கினார், வில்லிவாக்கம் வடகிழக்கு ஒன்றிய செயலாளர் மோரை கோ தயாளன், மாவட்ட கவுன்சிலர் மோரை மு.சதீஷ்குமார், தலைமை ஆசிரியை மற்றும் பத்மநாபன், திருநாவுக்கரசு, கிளைச் கழக செயலாளர், கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : The collector inaugurated the school, which was donated to the government by a private educational institute worth Rs.20 crore
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு