×

நாடாளுமன்ற துளிகள்....

* 2.78லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு ஒன்றிய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதில்: நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களில் பதிவு அதிகரித்துள்ளது. 2021ம்ஆண்டு 3,29,808 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. 2022ம் ஆண்டில் இது 10,20,679 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 2.78லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

* சிபிஐ அனுமதியை திரும்ப பெற்ற 9 மாநிலங்கள் மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலமாக அளித்த பதிலில், ‘‘சட்டீஸ்கர், ஜார்கண்ட், கேரளா, மேகாலயா, மிசோரம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும்  மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்கள் வழக்குகளை விசாரிப்பதற்காக சிபிஐக்கு அளித்த பொது ஒப்புதலை திரும்ப பெற்றுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.


* நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆராய்ந்து நடவடிக்கை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அளித்த பதில்;  தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அரசு ஆராய்ந்து வருகின்றது. இதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.



Tags : Parliament , Parliament drops….
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...