எழிச்சூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம், எழிச்சூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். குன்றத்தூர் ஒன்றியம், எழிச்சூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், ஒரத்தூர் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, காவனூர் ஊராட்சி மன்ற அலுவலகம், சாலமங்கலம் ஊராட்சி சிறுமாத்தூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம், படப்பை ஊராட்சி பெரியார் நகரில் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம், மேட்டு தெருவில் அங்கன்வாடி மையம், கரசங்கால் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம், பழந்தண்டலம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், அமரம்பேடு ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சமையலறை உள்ளிட்ட கட்டிடங்கள் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டிடங்கள் திறப்பு விழா அந்தந்த ஊராட்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவிற்கு, குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி தலைமை வகித்தார். விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வபெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட குழு தலைவர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒரத்தூர் வள்ளி சுந்தர், காவனூர் உமாமகேஷ்வரி வெங்கடேசன், படப்பை ஊராட்சி துணை தலைவர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: