×

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா, தமிழக சட்டப்பேரவையில் இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. விரைவில் இது கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்; ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை சட்ட மசோதா மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதை வரவேற்கின்றேன்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான  தடை சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள நிலையில் இந்த மசோதா மீண்டும் சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழ்நாட்டில் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் மக்களின் உயிர் பிரச்னையாக கருதப்படும் இந்த மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல்  உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Governor ,DTV ,Dhinakaran , Online, Rummy Ban, Bill, Governor, Approval, Must Give, TTV Dhinakaran
× RELATED தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு...