×

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 6வது முறையாக பின்லாந்து முதலிடம்.! 125 இடத்தில் இந்தியா

நியூயார்க்: மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து, 6வது முறையாக தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியா 125 இடத்தில் நீடிப்பது வேதனையாக உள்ளது. உலக மகிழ்ச்சி தினம் ஆண்டுதோறும், மார்ச் 20ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் தரவரிசை பட்டியலை ஐ.நா. சபையின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு வெளியிட்டுள்ளது. வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகள் அடிப்படையில் பல்வேறு நாடுகளில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த பட்டியலில் தொடர்ந்து 6வது ஆண்டாக ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து ஆகியவை முறையே 2, 3வது இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 125வது இடத்தில் நீடிக்கிறது. அண்டை நாடுகளான நேபாளம், சீனா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது. தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் இந்த பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Tags : Finland ,India , Finland tops the list of happiest countries for the 6th time. India at 125th place
× RELATED பஞ்சுப் போர்வை போல காணப்படும்...