×

பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சி: உலகம் முழுவதும் ஒலிபரப்ப பாஜக முடிவு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் ஒலிபரப்ப பாஜ முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அக்டோபர் 3ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாதம் தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 2வது முறையாக பாஜ ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.  இந்நிலையில், பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 30ம் தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை வெற்றியடைய செய்யும் நோக்கில், பாஜ முழு அளவில் தயாராகி வருகிறது. நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பாஜ முழு அளவில் தயாராகி வருகிறது.

Tags : PM Modi ,Baat ,BJP , PM Modi's 100th Mann Ki Baat: BJP decides to telecast worldwide
× RELATED அமித்ஷாவுக்கு பாஜ நிர்வாகி எழுதிய கடிதத்தை வெளியிட்டு ராகுல் பிரசாரம்