×

மது நுகர்வோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைவு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

சென்னை: மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மது நுகர்வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ. ரவி எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். கடந்த கொரோனா காலத்தில் மது நுகர்வோர் எண்ணிக்கையில் வீழ்ச்சிதான் இருந்தது. மது விற்பனை மூலம் கடந்த ஆண்டு ரூ.32,000 கோடியும் இந்த ஆண்டு ரூ.45,000 கோடியும் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. தற்போதும் மது நுகர்வோர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளதே தவிர அதிகமாகவில்லை எனவும் கூறினார்.


Tags : Tamil Nadu ,Minister ,Palanivel Thiagarajan , Alcohol consumption is low in Tamil Nadu: Minister Palanivel Thiagarajan explains
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்