×

உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட்: நடராஜனுக்கு வாய்ப்பு

சென்னை: இந்தியாவிற்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர்  கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்தியாவிடம் 2-1 என்ற கணக்கில் பறிகொடுத்தது. தமிழக வீரரான நடராஜனுக்கு ஐபிஎல் 2020 வாழ்வில் பெரும் திருப்புமுனையாக இருந்தது. அந்த சீசனில் மட்டும் அவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டி இருந்தார். டெத் ஓவர்களில் தொடர்ந்து யார்க்கர்களை வீசும் அவரது திறமையால் அனைவரையும் கவர்ந்த அவருக்கு ‘யார்க்கர் கிங்’ என்ற செல்லப் பெயர் வழங்கப்பட்டது. மேலும் அதே ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்த இந்திய அணிக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் நெட் பவுலராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடராஜன், அதன்பிறகு சுற்றுப்பயணத்தின் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சர்வதேச அளவில் அறிமுகமான முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேலும், ஆஸ்திரேலியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்த இந்திய அணியில் முக்கிய வீரராகவும் இருந்தார். இருப்பினும், ஐபிஎல் 2021ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய நடராஜன் அடுத்தடுத்த காயங்களால் அவதியுற்றார். அதற்காக அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டார். அதன்பின்னர், ஐபிஎல் 2022ல் விளையாடிய அவர் 11 போட்டிகளில் 18 விக்கெட்டுகளுடன் வலுவான கம்பேக் கொடுத்தார். ஆனால், மற்றொரு காயம் அவருக்கு பின்னடைவை கொடுத்தது. இதனால் டி20 உலகக் கோப்பையில் இடம் பெறத் தவறிவிட்டார். ஆனால், தற்போது நடராஜன் ஐபிஎல் 2023ல் களமாட ஆயத்தமாகி வருகிறது. கடந்த திங்கள் முதல் அவர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். உடற்தகுதியிலும் சிறப்பாக இருக்கிறார். அதனால், அவரை இந்திய மண்ணில் நடக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு இந்திய அணி பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Tags : World Cup ,Natarajan , World Cup One Day Cricket: Chance for Natarajan
× RELATED சில்லி பாயின்ட்…