×

ராகுல்காந்திக்கு சிறை தண்டனை: குடந்தையில் கே.எஸ்.அழகிரி ரயில் மறியல் போராட்டம்

கும்பகோணம்: பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. இதை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சாலை, ரயில் மறியல், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இன்று பகல் 12.05 மணிக்கு சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கே.எஸ்.அழகிரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதன், குடந்தை மாநகர தலைவர் மிர்ஷாவுதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.


Tags : Rahul Gandhi ,KS Azhagiri ,Kudantai , Jail sentence for Rahul Gandhi: KS Azhagiri train picket protest in Kudantai
× RELATED நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து...