ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

சென்னை: ராகுலுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது தவறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டபேரவை வளாகம் மற்றும் சட்டப்பேரவை வளாகத்திற்கு எதிரே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை இந்த தீர்ப்பு வந்தவுடன் சட்டபேரவை நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போது அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தலைமையில் சுமார் 17 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற வளாகம் அமைந்திருக்க கூடிய பகுதியிலும் அதற்கு உள்ளே இருக்கும் சாலையிலும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும், பாஜகவிற்கு எதிராகவும் கடும் விமர்சனங்களையும், கோஷங்களையும் எழுப்பிய நிலையில் காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.  

அவர்கள் மீண்டும் அவையில் கலந்து கொள்வதற்காக தங்களுடைய கழுத்தில் கருப்புபட்டை அணிந்து மீண்டும் சட்டப்பேரவைக்குள்ளாக சென்றனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்து தங்களுடைய எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர். இதேபோல் கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Related Stories: