×

ஆன்லைன் சூதாட்டத்தை ஒழித்தே தீர வேண்டும்; அதில் மாற்று கருத்து இல்லை: பேரவையில் நயினார் நாகேந்திரன் பேச்சு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை ஒழித்தே தீர வேண்டும்; அதில் மாற்று கருத்து இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இன்னொரு வல்லுநர் குழு அமைத்து சட்டப்பிரச்சனை இல்லாமல் சட்டம் கொண்டு வரலாம். மீண்டும் குழு அமைத்து நிறைவேற்றி, புதிதாக அனுப்பினால் நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். ஒன்றிய அரசோடு முரண்பாடு இல்லாமல் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து, பொதுமக்களிடம் கருத்து கேட்டுத்தான் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சபாநாயகர் கூறினார். அவர் (நயினார் நாகேந்திரன்) இருக்கும் கட்சிக்கு அவர் அப்படித்தான் பேசுவார்; அதை விட்டுவிட வேண்டும் என்று அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார்.

கடமையை தட்டிக் கழிக்கிறார் ஆளுநர் :  ஜி.கே. மணி

முதலமைச்சரின் பேச்சு அரசியல் பன்மையும், ஆளுநர்  பதவி மேல் உள்ள மதிப்பையும் காட்டுகிறது என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை பா.ம.க. வரவேற்கிறது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பி சட்டப்பேரவை மாண்பை ஆளுநர் கொச்சைப்படுத்தியுள்ளார். பெரு முதலைகள் தமிழ்நாட்டு இளைஞர்களிடம் பணத்தை சுரண்டி தற்கொலைக்கு தூண்டி வருகின்றன.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக முதலமைச்சர் உறுதியாக எடுத்திருக்கும் நடவடிக்கையாக இதை பாமக பார்க்கிறது. தனது கடமையை ஆளுநர் ரவி தட்டிக் கழிக்கிறார் என பேரவையில் ஜி.கே.மணி குற்றம்சாட்டினார். ஆளுநர் காலம் தாழ்த்தியது மிகப்பெரிய உள்நோக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்றும் ஜி.கே.மணி கூறினார்.

மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு காங். கண்டனம்:


ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.


Tags : Nayanar Nagendran ,Parliament , Online Gambling,Alternative Opinion,Paravai,Nayanar Nagendran
× RELATED நயினார் நாகேந்திரன் கொடுத்த பணம்...