அம்புக்கோவில் கிராமத்தில் வயலில் நாற்று நடும் பணியில் வடமாநில தொழிலாளர்கள்

கறம்பக்குடி: அம்புக்கோவில் கிராமத்தில் வயல்களில் நாற்று பறிக்கும், நடும் பணியில் வடமாநி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி திருஞானம். இவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கறம்பக்குடி ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இவர் அந்த கிராமத்தில் பல ஏக்கரில் வருடம் தோறும் நடவு செய்யும் பணியில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் சம்பா நடவு நெற் பயிர்களை அறுவடை செய்த பிறகு தற்போது நடவு பணியில் ஈடுபடுவதற்காக முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறி தமிழகத்தில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வலைதளங்களில் வதந்தியை பரப்பி வருகின்றனர். அந்த வதந்திகளை பொய்யாக்கும் வகையில் ரெகுநாதபுரம் பகுதிகளில் தங்கி பல்வேறு விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் வட மாநிலத்தவர்களாகிய குறிப்பாக மேற்கு வங்காளம் மாநிலம் கல்கத்தாவை சேர்ந்த தொழிலாளர்கள், விவசாயி திருஞானம் என்பவரது வயலில் விவசாய பணிகளில் ஈடுபட்டனர். 13 தொழிலாளிகள், நெல் வயலில் நாற்றுகளை பறித்து நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் கேட்ட போது, ஒரு ஏக்கர் அளவிற்கு ரூ.4500 பேசி நாற்றுகளை பறித்து நடவு பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் விவசாய பணிகளுக்கு இப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களும் அன்பும் ஆதரவும் காட்டி முழு ஒத்துழைப்பும் கொடுத்து வருகின்றனர் என்றனர்.

13 தொழிலாளிகளும் ஒரே நாளில் நான்கு ஏக்கர் அளவிற்கு நாற்று பறிக்கும் பணியில் ஈடுபட்டு நடவு பணிகளை செய்து வருவது விவசாயிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: