×

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேறியது... மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேறியது. ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். மேலும் மசோதா தொடர்பான நீண்ட விளக்கத்தையும் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு பேசி இருந்தார். மேலும்,ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா, அறிவால் மட்டுமல்ல இதயத்தாலும் உருவாக்கப்பட்டது. மனித உயிர்களை பழிவாங்கும் ஆன்லைன் சூதாட்டங்களை ஒடுக்குவதில், இதயம் உள்ளவர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்காது, இருக்கவும் கூடாது.ஆன்லைன் சூதாட்ட அநியாயம் தொடராமல் இருக்க, இந்த சட்ட முன்வடிவை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும். இனி ஒரு உயிர் பறிக்கப்படக் கூடாது, அநியாயம் தொடரக்கூடாது. அனைத்து உறுப்பினர்களும் இந்த சட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், திமுக சார்பில் துரைமுருகன், பாமக சார்பில் ஜி,கே,மணி, விசிக சார்பில் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை வரவேற்று பேசினர். இதையடுத்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் மசோதா ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆதரவளித்த உறுப்பினர்களுக்கு நன்றி. இந்த சட்ட மசோதா மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும்,என்றார்.

Tags : Chief of the CM ,Governor ,G.K. stalin , online,gambling,prohibition,bill,principal,M.K.Stalin
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...