×

ஆஸ்திரேலியாவுடனான 3 ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்திலேயே அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்தார் சூரியகுமார் யாதவ்

சென்னை: ஆஸ்திரேலியாவுடனான நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்திலேயே அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்தார் இந்திய வீரர் சூரியகுமார் யாதவ்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

முதல் 2 போட்டிகளில் தலா 1 வெற்றியுடன் இரு அணிகளும் நேற்று களம் கண்டனர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் சேர்த்து. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக மார்ஷ் 47 ரன்கள் சேர்த்தார். இந்தியாவில் பாண்டியா, குல்தீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஓரளவு கடினமான இலக்கை துரத்திய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா 30 ரன்களில் அவுட் ஆனார். கில் 37 ரன்களில் அவுட் ஆன நிலையில் விராட் கோலி-ராகுல் ஜோடி ஓரளவு நம்பிக்கையளித்தது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி தனது 65வது அரைசதத்தை அடித்தார். ராகுல் அவுட் ஆன நிலையில் அடுத்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ் இந்த போட்டியிலும் முதல் பந்திலேயே அவுட் ஆக்கினார்.

ஆஸ்திரேலியாவுடனான 3 போட்டிகளிலும் முதல் பதிலே அவுட் ஆகியது மோசமான சாதனையாக அமைந்தது.பாண்டியா 40 ரன்கள் விளாசினார். மற்ற பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடாததால் இந்திய அணி தோல்வியை தழுவியது.


Tags : Suryakumar Yadav ,Australia , Suryakumar Yadav has made a worst record by getting out on the first ball in all 3 ODIs against Australia
× RELATED அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை...