×

ஆளுநர் செய்தது பெரிய தவறு என்பதை எடுத்துரைத்து விமர்சிக்க அனைத்து உரிமைகளும் உள்ளது: துரைமுருகன் பேச்சு

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். மிகவும் கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்று கூறினார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து பேரவையில் பலர் கருத்து தெரிவித்தனர். அந்த வகையில்,

தொடர்ந்து அரசியலமைப்பு சட்டத்தை மீறும் ஆளுநர்: விசிக

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை விரிவான ஆய்வுக்கு பிறகே முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார் என்று ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.  பொதுமக்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் கேட்ட பிறகே மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்டங்களை நடத்தும் நிறுவனங்களிடம் கருத்து கேட்டுள்ளார். திமுக அரசு சட்டப்படி செயல்படுகிறது; ஆனால் ஆளுநரோ அரசியலமைப்பு சட்டத்தை தொடர்ந்து மீறி வருகிறார்.

பேரவையில் ஆளுநருக்கான அனைத்து மரியாதையும் மரபுப்படி வழங்கப்படுகிறது; ஆனால் பேரவையிலேயே மரபுகளை மீறுகிறார். ஆளுநர் அதிகாரம் சட்டப்படி வரையறுக்கப்பட்டுள்ளது; ஆனால் அவர் அதை தொடர்ந்து மீறுகிறார். அனைத்து நெறிமுறைகளையும் ஆளுநர் மீறியிருக்கிறார். ஆளுநர் நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.
ஆளுநரின் நியமனங்களில் மாநில அரசின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என்று ஆளூர் ஷாநவாஸ் கூறியுள்ளார்.

சபாநாயகர்:

ஆளுநரை தனிப்பட்ட முறையில் யாரும் விமர்சிக்கவில்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

ஆளுநரை விமர்சிக்கும் உரிமை பேரவைக்கு உண்டு: துரைமுருகன்

ஆளுநரை விமர்சிக்கும் உரிமை பேரவைக்கு உண்டு. ஆளுநர் செய்தது பெரிய தவறு என்பதை எடுத்துரைத்து விமர்சிக்க அனைத்து உரிமைகளும் உள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை நிலுவையில் வைத்துள்ளதால் ஆளுநரை விமர்சிக்கும் உரிமை பேரவைக்கு உண்டு. அவர் ( நயினார் நாகேந்திரன் ) இருக்கும் கட்சிக்கு அவர் அப்படிதான் பேசுவார்; அதை விட்டுவிட வேண்டும் என்று துரைமுருகன் தெரிவித்தார்.


Tags : Governor ,Tumurugan , Governor, wrong, right, duraimurugan
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...