×

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் சொல்வதை ஏற்க முடியாது: பேரவையில் எம்.எல்.ஏக்கள் கண்டனம்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. மனசாட்சியை உறங்கச் செய்துவிட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என முதலமைச்சர் தெரிவித்தார். இதுகுறித்து சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில்,

ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: வேல்முருகன்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாயுள்ளத்தோடு கொண்டு வரப்பட்டுள்ளது. சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் சொல்வதை ஏற்க முடியாது. ஆன்லைன் சூதாட்டம் நடத்துகிற உரிமையாளர்களை ஆளுநர் ஏன் சந்திக்க வேண்டும்?  என்று வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்ததில் உள்நோக்கம் இருக்குமோ என சந்தேகிக்கிறேன். தமிழ்நாடு ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என பேரவையில் வேல்முருகன் வலியுறுத்தினார்.

பாமர மக்கள் கூட ஏற்கும் கோரிக்கை: கொ.ம.தே.க. ஈஸ்வரன்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பது படிக்காத பாமர மக்கள் கூட ஏற்கும் கோரிக்கை என்று கொ.ம.தே.க. ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி என்பது கேம் ஆஃப் சான்ஸ்தானே தவிர, கேம் ஆஃப் ஸ்கில் அல்ல. செஸ் மற்றும் கோல்ஃப் விளையாட்டை போன்றது அல்ல ஆன்லைன் ரம்மி. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்ப முடியாது. மீண்டும் இதை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியாது. ஆனால் மறுபடியும் தாமதிப்படுத்தினால் என்ன செய்வது?. மசோதாவை திருப்பி அனுப்புவது என்பது ஒட்டுமொத்த பேரவையையும் அவமதிக்கும் வகையில் ஈஸ்வரன் உள்ளது எனவும் ஈஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.

ஆளுநர் பதவிக்கு அழகல்ல: ஜவாஹிருல்லா

அக்டோபரில் அவசர சட்டமாக சூதாட்ட தடைச் சட்டம் அனுப்பியபோது ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்தார். அதையே சட்ட முன்வடிவாக கொண்டு வந்த போது, சில மாதங்களுக்கு பிறகு திருப்பி அனுப்பியிருக்கிறார். சட்டமன்றம் நிறைவேற்றிய சூதாட்ட தடை மசோதா பரிசீலனையில் இருக்கும்போது, ஆன்லைன் ரம்மி நடத்துவோரை ஆளுநர் சந்தித்திருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல. மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநர் சொன்ன அனைத்து காரணத்துக்கும் முதலமைச்சர் முன்னுரையில் பதில் அளித்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் நலனில் அக்கறை உடையவராக இருந்திருந்தால் ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பார் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.


Tags : Assembly MLAs , Online Gambling Prohibition Bill, Legislature, Governor, Assembly, MLAs
× RELATED தமிழ்நாட்டில் 39 தொகுதியில் வேட்பு...