கோயம்பேடு புதிய மேம்பாலத்தில் பைக்கில் அசுர வேகத்தில் சென்ற வாலிபர் பரிதாப பலி

அண்ணாநகர்: கோயம்பேடு புதிய மேம்பாலத்தில் பைக்கில் அசுரவேகத்தில் சென்ற வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலியானார். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள புதிய மேம்பாலத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் பைக்கில் அசுரவேகத்தில் சென்ற வாலிபர், நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், பைக்கில் சென்று விபத்தில் இறந்தவர் பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் (25) என்பதும், இவர் தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் என்பதும் தெரியவந்தது. வழக்கம்போல பைக்கில் வேலைக்குச் சென்றபோது நேற்று இவர் விபத்தில் இறந்துள்ளார். இந்த விபத்தால் கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: