×

தமிழ்நாட்டைக் காக்க தண்ணீர் வளங்களை காப்போம்: ராமதாஸ் உலக தண்ணீர் நாள் வாழ்த்துச் செய்தி

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு:தண்ணீர் நெருக்கடியால் அதிகம் பாதிப்படையும் பகுதிகளில் ஒன்றாக தமிழ்நாடும் இருக்கிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக வறட்சி அதிகமாகிறது; மிகக் குறுகிய காலத்தில் மிக அதிக அளவு மழைப் பொழிவும் ஏற்படுகிறது. இவற்றால் தமிழ்நாட்டின் தண்ணீர் நெருக்கடி மென்மேலும் மோசமடையும் நிலையே உள்ளது.எனவே, தமிழ்நாட்டின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காப்பாற்ற போர்க்கால வேகத்தில் நீர்வள ஆதாரங்களை காப்பாற்றவும் மேம்படுத்தவும் வேண்டும். அதற்கான அனைத்து பணிகளையும் ஒன்றிய, மாநில, உள்ளாட்சி அரசுகள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.



Tags : Tamil Nadu ,Ramdas' ,World Water Day , Let's save water resources to save Tamil Nadu: Ramdas' message on World Water Day
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்