தமிழ்நாட்டில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக, கடந்த 7 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்றும் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் ஈரோட்டில் 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக பாம்பன் பகுதியில் 21 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் 4.1 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேலும் வெப்பம் அதிகரித்தது. திருப்பத்தூர், திருவள்ளூர், நீலகிரி, மாவட்டங்களில் இயல்பைவிட 3.0 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் குறைந்து காணப்பட்டது.

சென்னை, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருச்சி, திருவள்ளூர், வேலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 2.1 டிகிரி செல்சியஸ் முதல் 4.0 டிகிரி செல்சியஸ் வரை கணிசமாக வெப்பம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்று இணைந்து காணப்படுவதால் தமிழ்நாடு புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் இந்த நிலை 26ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

Related Stories: