×

தமிழக அரசுக்கு நடிகர் கார்த்தி புகழாரம் உழவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வேளாண் பட்ஜெட்

சென்னை: உழவன் பவுண்டேஷன் நிறுவனரும் நடிகருமான கார்த்தி வெளியிட்ட அறிக்கை: வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு, நீர் நிலைகள் சீரமைப்பு , மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது. இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. அதோடு சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது.

ஆனால் அவைகளை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது.இது போன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால், அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம்.

* கார்த்திக்கு முதல்வர் பதில்
நடிகர் கார்த்திக்கு நேற்றிரவு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் பதிலளித்துள்ளார். அதில் அவர், அன்பின் கார்த்தி, உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம். உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம். பாராட்டுக்கு நன்றி எனச் ‘சொல்ல மாட்டேன்’; இன்னும் பல திட்டங்கள் தீட்டி, உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண ‘செயலாற்றுவோம்’ என்று கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu government ,Karthi , Tamil Nadu government praises actor Karthi Pukhazaram for agricultural budget that meets the needs of farmers
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்