இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை தென்காசியிலும் மத போதகர் கைது

பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் பிலிவர்ஸ் சர்ச் அமைந்துள்ளது. இங்கு மத போதகராக நாகர்கோவில் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த ஸ்டான்லிகுமார் (49) உள்ளார். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பெண், ஆலங்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், ‘3 குழந்தைகளின் தாயான மூத்த மகள் விருதுநகரில் வசித்து வருகிறார். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்த மகளை, சிவகாமிபுரம் பிலிவர்ஸ் சர்ச்சுக்கு அழைத்து சென்று, மத போதகர் ஸ்டான்லிகுமாரிடம் ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர், எனது மகளை 3 நாள்கள் சர்ச்சில் தங்க சொன்னார்.

அவர் மீதான நம்பிக்கையில் மகளை தங்க வைத்தேன். ஆனால் ஸ்டான்லிகுமார், எனது மகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதுடன், ஆபாசமாக  பேசியுள்ளார். இதேபோல் சர்ச்சுக்கு வரும் பல பெண்களிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும் சர்ச்சுக்குள் அதிநவீன சுழல் வீடியோ, ஆடியோ பதிவுகளுடன் கேமராக்களை பொருத்தி, அனைவரையும் வீடியோ பதிவு செய்து, பெண்கள் புகைப்படங்களை மார்பிங் செய்து வைத்துள்ளதாகவும் மிரட்டி வருகிறார்’. என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்து. தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: