சென்னையில் ஜி-20 மாநாடு சென்னையில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

சென்னை: சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை: ஜி-20 கூட்டம் வரும் 24ம் தேதி மற்றும் 25ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த ஜி-20 மாநாட்டில் 29 வெளிநாடுகள் மற்றும் 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னையிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா, ஓட்டல் ரமடா பிளாசா, சர்தார் பட்டேல் ரோடு, ஓட்டல் ஹப்ளீஸ், கிண்டி மற்றும் ஓட்டல் பாரக் ஹையாத், சென்னை வேளச்சேரி ரோடு ஆகிய இடங்களில் தங்கியும், சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற உள்ள கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர். எனவே நேற்று முதல் 25ம் தேதி வரையில் சென்னை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேற்கூறிய பிரதிநிதிகள் தங்கும் இடங்கள், விழா நடைபெறும் இடங்கள் மற்றும் மேற்படி பிரமுகர்கள் பயணம் செய்யும் வழிதடங்கள் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு அந்த பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் நேற்று முதல் 25ம் தேதி வரையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: