சென்னை: தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில் உழவர்களின் நலனிற்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை பாராட்டி உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனத் தலைவர் நடிகர் கார்த்தி சிவகுமார் அவர்கள் எழுதிய கடிதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; அன்பின் கார்த்தி சிவகுமார், உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம். உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம். பாராட்டுக்கு நன்றி எனச் சொல்ல மாட்டேன்; இன்னும் பல திட்டங்கள் தீட்டி உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண செயலாற்றுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
