×

தமிழ்நாடு ஜவுளித்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு இன்று சிறப்பான நாள் என்றும் முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகர், பிரதமரின் மித்ரா மெகா ஜவுளிப் பூங்காவின் உறைவிடமாக இருக்கும். இது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும் பயனளிக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தமிழ்நாடு ஜவுளித்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. பிரதமரின் மெகா ஜவுளிப் பூங்கா, உலக அளவிலான செயற்கை இழை மற்றும் ஜவுளித் தொழில்நுட்ப சந்தையில் தமிழ்நாடு அதிக பங்கைப் பெற உதவும். இதன் மூலம் ஜவுளிக்கான சர்வதேச மையமாக மாறுவதற்கான இந்தியாவின் முயற்சிகளை ஊக்குவிக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடக, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட உள்ள பிரதமரின்  மித்ரா மெகா ஜவுளிப் பூங்காக்கள் “இந்தியாவில் தயாரிப்போம்” மற்றும் “உலகுக்காக உற்பத்தி செய்வோம்” என்பதற்கு சிறந்த உதாரணங்களாகத் திகழும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பண்ணையில் இருந்து நூல் இழை, அதிலிருந்து தொழிற்சாலை, அதிலிருந்து ஆடை வடிவமைப்பு அதிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என்ற அடிப்படையிலான தொலைநோக்குப் பார்வைக்கேற்ப ஜவுளித்துறையை இந்தப் பூங்காக்கள் வலுப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். பிரதமரின் மித்ரா மாபெரும் ஜவுளிப்பூங்காக்கள், ஜவுளித்துறைக்கு  அதிநவீன உள்கட்டமைப்புகளை வழங்குவதுடன் கோடிக்கணக்கான முதலீடுகளை ஈர்த்து லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Tags : Tamil Nadu ,PM Modi , Tamil Nadu has close ties with textile sector: PM Modi Tweet
× RELATED தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை...