×

டெல்லி மதுபானக் கொள்ளை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்ளை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக் காவல் முடிந்த நிலையில் சிசோடியவை அமலாக்கப் பிரிவு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. விசாரணைக் காவல் முடிந்ததை அடுத்து நீதிமன்றக் காவலில் சிசோடியவை சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த 9ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி மதுபானக்கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரிகள் கலால் துறை அதிகாரிகள் மற்றும் தொழிலதிபா்கள் சிலரை கைது செய்தது.

இதன் தொடர்ச்சியாக, கலால் துறை அமைச்சராக இருந்த துணை முதல்வர் சிசோடியாவின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில்  சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பின் சிசோடியாவை விசாரணைக்காக இரண்டு முறை வரவழைத்தனர்.

இரண்டாவது முறையாக கடந்த மாதம் 26ம் தேதியன்று விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான சிசோடியாவை அன்று இரவு கைது செய்தனர். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிபிஐ காவல் கடந்த 6ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அவரை அதிகாரிகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம் கே நாக்பால் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது மேற்கொண்டு சிபிஐ காவலை அதிகாரிகள் கோராததால் மார்ச் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து விசாரணைக் காவல் முடிந்த நிலையில் சிசோடியவை அமலாக்கப் பிரிவு இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. தற்போது மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Delhi ,Manish Sisodia , Delhi court orders Manish Sisodia in judicial custody till April 5 in Delhi liquor robbery case
× RELATED மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு..!!