×

நவ. 5ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி?

மும்பை: இந்தியா முழுவதும் நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் அக். 5ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இறுதிப்போட்டி நவ. 5ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு, தர்மசாலா, ஹைதராபாத் உள்ளிட்ட 12 நகரங்களில் போட்டிகள் நடக்க உள்ளன.

1975ம் ஆண்டு முதல் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. முதல் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியனானது. இதைத்தொடர்ந்து 1979ம் ஆண்டும் மேற்கிந்திய தீவுகள் அணியே மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதையடுத்து ஹாட்ரிக் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாருமே எதிர்பார்க்காத கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி  சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இதுவரை நடைபெற்ற 12 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 5 முறையும்,  மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகள் இருமுறையும், பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 1 முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

கடந்த முறை 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை இங்கிலாந்து நடத்த, இந்த முறை 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துகிறது. இந்த தொடரின் இறுதி போட்டி நவ. 5ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு, தர்மசாலா, ஹைதராபாத் உள்ளிட்ட 12 நகரங்களில் போட்டிகள் நடக்க உள்ளன. இந்தியா கடைசியாக 2011ம் ஆண்டு வங்கதேசம் மற்றும் இலங்கையுடன் சேர்ந்து ஒருநாள் உலகக்கோப்பையை நடத்தியது. இதில் இந்திய அணி 1983க்கு பிறகு தோனி தலைமையில் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags : World Cup ,Narendra Modi Stadium ,Ahmedabad , Nov. The final of the World Cup series at the Narendra Modi Stadium in Ahmedabad on the 5th?
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது