×

போரூர் ஏரியில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

பூந்தமல்லி:  போரூர் ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஏரியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.  அதில், வேட்டி  மற்றும் பனியன் அணிந்த நிலையில், சடலமாக கிடந்தவர் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் என்பது  தெரியவந்தது.  இதையடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார், இறந்து போன நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர், குளிக்க வந்தபோது தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல கோணங்களில் விசாரிக்கின்றனர்.Tags : Borur lake , Man's body recovered from Borur lake: Police probe
× RELATED நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி