பாயா கேட்டு ஓட்டலில் ரகளை 2 காவலர்கள் பணியிடை நீக்கம்: துணை ஆணையர் அதிரடி

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் உள்ள ஓட்டலில் பாயா கேட்டு ரகளையில் ஈடுபட்ட 2 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். திருவொற்றியூர் கணக்கர் தெருவில் ஒட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் 5 போலீசார், பணி முடிந்து சாப்பிட சென்றுள்ளனர். அப்போது அவர்கள், பரோட்டாவுக்கு பாயா கேட்டுள்ளனர். அதற்கு ஓட்டல் ஊழியர்கள், சேர்வா மட்டும்தான் உள்ளது. பாயா இல்லை, என்று கூறியுள்ளனர்.

இதனால், காவலர்கள் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டதுடன், ஓட்டல் ஊழியர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள்  அங்கிருந்து சென்றுள்ளனர். போலீசார்  ஓட்டலில் ரகளை செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.  மேலும் இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார்.  இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  அப்போது, ஏட்டு கோட்டமுத்து, காவலர் தனசேகர் உள்பட 5 போலீசாரும் ஓட்டலில்  ரகளையில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து காவலர்கள் கோட்டமுத்து,  தனசேகர் ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்  உத்தரவிட்டார்.  மேலும் 3 காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க  உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories: