×

இன்று உகாதி திருநாள் கொண்டாட்டம் மகிழ்ச்சியும், வளமும் பெற தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உகாதி திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி: உகாதி, குடீ பாடவா, செட்டி சந்த் மற்றும் சைத்ரா நவராத்திரி ஆகிய பண்டிகைகளையொட்டி தெலுங்கு, கன்னடம், மராத்தி, சிந்தி மற்றும் தமிழ், இந்தி பேசும் சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற வருட பிறப்பு பண்டிகைகள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன.

தமிழிசை சவுந்தரராஜன் (தெலங்கானா ஆளுநர்): உகாதி நன்னாளில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் என்றென்றும் நிலைத்திருக்க நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி (எதிர்க்கட்சி தலைவர்): தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் என் இனிய உகாதி திருநாள் நல்வாழ்த்துகள்.
கே.எஸ்.அழகிரி (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்): தெலுங்கு, கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ உகாதி பண்டிகை நல்வாழ்த்துகள்.
திருநாவுக்கரசர் (காங்கிரஸ் எம்பி): தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுகிற மக்களுக்கு உகாதி பண்டிகை வாழ்த்துகள். அவர்கள் வாழ்வில் வளமும் நலமும் பெருகிட உளமாற வாழ்த்துகிறேன்.
டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): மொழியால் வேறுபட்டிருந்தபோதிலும் வணிகம், அரசியல், பண்பாட்டு, கலை, இலக்கியம் ஆகிய தொடர்புகளுடன் தென் இந்தியாவின் சகோதர, சகோதரிகளாக தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களும் நம்முடன் ஒன்றுபட்டிருக்கின்றனர். உகாதி புத்தாண்டு கொண்டாடும் இந்த தருணத்தில் இப்போது போல எப்போதும் எல்லா வளமும் பெற்று அன்பும், ஆரோக்கியமும் அவர்கள் வாழ்வில் என்றும் நீடித்து நிலைத்திருக்க விரும்புகிறேன்.
ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக் கட்சி தலைவர்): தமிழகமும் ஆந்திர மாநிலமும் அண்ணன் தம்பி போல் பழகும் மக்கள் நிறைந்த மாநிலங்கள். நம் இரு மாநில மக்களும் கலாச்சா ரீதியாகவும் ஒன்றிணைந்தவர்கள் இந்த இனிய தெலுங்கு புத்தாண்டு திருநாளில் தெலுங்கு சகோதரர்கள் அனைவருக்கும் உகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

* குளிர்கால காய்கறிகள் உற்பத்திக்கு ரூ.2.50 கோடி
சவ்சவ், பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்காலக் காய்கறிகள் உற்பத்தி, பயிர்களின் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்து, விதைகள், இடுபொருட்கள் வழங்குவதோடு, கொடிவகைக் காய்கறிகள் படர்வதற்கான குச்சிகள் வாங்க பின்னேற்பு மானியம் வழங்கப்படும். இத்திட்டம் 1000 எக்டர் பரப்பில் ரூ.2 கோடியே 50 லட்சம் நிதியில் செயல்படுத்தப்படும்.


Tags : Ugadi Thirunal , Leaders wish Ugadi Thirunal celebration happy and prosperous today
× RELATED உகாதி திருநாள் புத்தாண்டை, நாளை...