×

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகள் 7 பேர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூரில் செயல்பட்டு வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்றோர் காணாமல் போனது தொடர்பாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தொடர்பாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசிரம நிர்வாகிகள் ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 7 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், மனநலம் பாதித்து சாலைகளில் திரிவோரை காவல் துறையினர் உதவியுடன் மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.

கடந்த 25 ஆண்டுகளாக இந்த இல்லத்தை நடத்தி வரும் தங்களுக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து உரிமங்களும், சான்றுகளும் பெற்று இல்லத்தை நடத்தி வருகிறோம். காவல் துறையினரின் நிர்பந்தம் காரணமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாநில மனநல ஆணையத்திடம் இல்லத்துக்கு ஒப்புதல் கோரி அளித்த விண்ணப்பம் நிலுவையில் உள்ளது. தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க மாட்டோம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : Villupuram ,Anbujothi Ashram ,Court , 7 administrators of Villupuram Anbujothi Ashram petition in High Court seeking bail
× RELATED கோடை விடுமுறைக்கு பின் விழுப்புரம்,...