×

ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப் பட இயக்குநருக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: ஆஸ்கார் விருது பெற்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்-க்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகைக்கான காசோலையை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதுமலை யானைகள் முகாமில் எடுக்கப்பட்ட ஆவணப் படமான ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் படத்திற்கான குறும்படப் பிரிவில் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. தமிழ்நாடு வனத்துறையின் பராமரிப்பாளர்களால், இளம் யானைக் குட்டிகள் வளர்க்கப்படும் முறையை இந்தப் படம் விவரிக்கிறது.

தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பணியாற்றி வரும், பொம்மன் மற்றும் பெல்லி ஆகிய யானை பராமரிப்பாளர்களால் ஆறு மாதமாக இருக்கும்போது முகாமிற்கு கொண்டு வரப்பட்ட ‘ரகு’ யானைக் குட்டியை மேற்படி பராமரிப்பாளர்கள் எவ்வாறு கவனத்துடன் பராமரித்தார்கள் என்பதை ஆவணப்படம் காட்டுகிறது. இப்படம், அதே முகாமில் காப்பாளர்களால் வளர்க்கப்பட்ட மற்றொரு யானைக் குட்டியான ‘அம்மு’ பராமரிக்கப்பட்ட கதையையும் விவரிக்கிறது.

இந்த ஆவணப்படம் சினிமா துறையில் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதை வென்றுள்ளதுடன் தமிழ்நாட்டிற்கு பெருமையையும் சேர்த்துள்ளது. இந்த ஆவணப்படம் மூலம், யானைகளை பாதுகாப்பது குறித்த தமிழ்நாடு வனத்துறையின் பணி உலக கவனத்தை ஈர்த்துள்ளது. இதை அங்கீகரிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் வனத்துறைக்கு பெருமை ஏற்படுத்தியதற்காக, ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படத்தை உருவாக்கிய கார்த்திகி கொன்சால்வ்ஸுக்கு பாராட்டுச் சான்றிதழும், ரூ.1 கோடிக்கான காசோலையும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். அப்போது, இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் தான் பெற்ற ஆஸ்கார் விருதினை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். முன்னதாக யானைக் குட்டி “ரகு”வின் பராமரிப்பாளர்களான பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

* ஆஸ்கார் விருது கார்த்திகி கோன்சால்வஸ் பேட்டி
அதனை தொடர்ந்து கார்த்திகி கோன்சால்வ்ஸ் நிருபர்களிடம் கூறு.கையில், ‘‘தமிழ்நாட்டிற்காக ஆஸ்கார் விருது வாங்கியது மிக மகிழ்ச்சியாக உள்ளது. பழங்குடியினர் வாழக்கூடிய பகுதியில் இந்த ஆவணப்படம் எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு பெண்ணாக இந்த ஆஸ்கர் விருதை வாங்கியதில் பெருமை அடைகிறேன்’’ என்று கூறினார்.

Tags : Chief Minister ,M K Stalin , Rs 1 crore incentive for Oscar-winning documentary director: Chief Minister M K Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...