கொல்கத்தா: மேற்குவங்கம் மீதான ஒன்றிய அரசின் பாகுபாட்டை கண்டித்து வரும் 29, 30 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்த போவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து டம்டம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “அடுத்த நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் கூட மேற்கு வங்க மாநிலத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஒன்றிய அரசிடம் இருந்து மேற்குவங்கத்துக்கு மட்டும் தான் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஒன்றிய அரசின் இத்தகைய பாரபட்ச, எதேச்சாதிகார போக்கை கண்டித்து வரும் 29, 30 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு கீழ் அமர்ந்து போராட்டம் நடத்த உள்ளேன்” என்று தெரிவித்தார்.