ஸ்டிரைக்கில் பங்கேற்றால் விளைவுகளை சந்திக்கணும்: ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: பழைய ஓய்வூதியத்தை மீண்டும் கொண்டு வர வலியுறுத்தி நாடு முழுவதும் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி, தேசிய கூட்டு போராட்டக் குழு (என்ஜேசிஏ) சார்பில் மாவட்ட அளவிலான பேரணிகள் நடத்த நேற்று திட்டமிடப்பட்டது. இந்நிலையில், அனைத்து ஒன்றிய அரசு துறைகளின் செயலாளர்களுக்கு பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில், ‘வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது நடத்தை விதிகளின்படி கடுமையான தவறான நடவடிக்கையாகும்.

இது பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, போராட்டம் உள்ளிட்ட எந்த விதத்திலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும். இது ஊதியம் பிடித்தம் செய்வதைத் தவிர, தகுந்த ஒழுங்கு நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். போராட்டத்தில் பங்கேற்க ஊழியர்கள் விடுப்பு எடுப்பதை அனுமதிக்க கூடாது’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: