×
Saravana Stores

நடைபாதைகளை ஆக்ரமிக்கும் வாகனங்கள் பறிமுதல்: மேயர் மகேஷ் எச்சரிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், இன்று காலை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் ஆய்வு செய்தார். இங்கு ரூ.2 கோடியில் சாலை விரிவாக்கம் பணிகள் மற்றும் நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் பெதஸ்தா வணிக வளாகம், அந்த பகுதியில் உள்ள குளத்தை பார்வையிட்டார். குளத்தை தூர்வாரி பூங்காவும் அமைக்கப்பட உள்ளது. பின்னர் அந்த பகுதியில் நடை பாதைகளில் வாகனங்கள் நின்றன. அந்த வாகனங்களை அகற்றும்படி மேயர் உத்தரவிட்டார்.

நடைபாதைகளில் நிற்கும் பைக்குகள், கார்களை பறிமுதல் செய்ய காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் மகேஷ் கூறினார். மேயருடன், மாநகராட்சி இன்ஜினியர் பாலசுப்பிரமணியம், நகர் நல அலுவலர் டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேஷ், ஜாண், கவுன்சிலர்கள் விஜிலா ஜஸ்டஸ், பால் அகியா மற்றும் திமுக நிர்வாகிகள் பன்னீர் செல்வம், வேல்முருகன், எம்.ஜே.ராஜன், ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Mayor ,Makesh , Seizure of vehicles encroaching on sidewalks: Mayor Mahesh warns
× RELATED சென்னை மெரினா கடற்கரையில் விரைவில் ரோப் கார் வசதி; மேயர் பிரியா அறிவிப்பு!