×

வெளிநாடு தப்பியோடிய நீரவ் மோடியின் வங்கி கணக்கில் ரூ.236 தான் இருக்கு.!

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று ரூ.13,500 கோடி மோசடி செய்த பிரபல தொழிலதிபரும் வைர வியாபாரியுமான நீரவ் மோடி, தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். பணமோசடி வழக்கில் தேடப்படும் மற்றும் தலைமறைவு குற்றவாளியான அவரது வங்கிக் கணக்கில் 236 ரூபாய் மட்டுமே உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து நாட்டை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் வங்கிக் கணக்கில் வெறும் 236 ரூபாய் மட்டுமே உள்ளது. இவர் 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடந்து வருகின்றன. ஒரு வழக்கில் அவருக்கு எதிராக நீதிமன்றம் ரூ.1.47 கோடி அபராதம் விதித்தது. ஆனால் அவற்றை எதிர்த்து மேல்முறையீடு கூட செய்யவில்லை’ என்றனர்.

Tags : Nirav Modi , The bank account of Nirav Modi, who fled abroad, has only Rs. 236.!
× RELATED வங்கி மோசடியாளர்களுடன் மோடி...