10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மார்ச் 27 முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மார்ச் 27 முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். என அறிவித்துள்ளார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிவடைகிறது. 6-ம் தேதி மொழிதேர்வும் , 10-ம் தேதி ஆங்கிலம், 13ம் தேதி கணிதம், 15-ம் தேதி விருப்ப பாட தேர்வும், 17-ம் தேதி அறிவியல் தேர்வும், 20ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறும்.

நடைபெறவுள்ள ஏப்ரல் பள்ளி 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 27.03.2023 அன்று பிற்பகல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியலில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள் எதாவது  இருந்தால் சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்திற்கான பெயர்பட்டியலில் உரிய திருத்தங்கள்  மேற்கொள்ளும்படி, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர், முதல்வர்களிடம் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்கிறேன் நேரு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

Related Stories: