×

கன்னியாகுமரி மீனவப்பெண்களின் அசத்தல் உணவுத்திருவிழா: விதவிதமான மீன் உணவு வகைகளை உண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் மீனவப்பெண்கள் நடத்திய மீனவ உணவு திருவிழாவில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று விதவிதமான மீன் வகைகளை ஆர்வத்துடன் உண்டு மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் குமரி முனையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இந்த மீன் உணவு திருவிழா நடைபெற்றது. இதில் சீலா, கணவாய், நண்டு, இறால், ஆயிலை, பாறை உட்பட பல்வேறு வகையான மீன்களில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் இடப்பெற்று இருந்தன.

மீன்களில் பல விதமான பிரியாணி வகைகள் மீன் தொக்கு வகைகள், மீன் மஞ்சூரியன் என 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ச்சியுடன் உண்டு மகிழ்ந்தனர். உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமான இந்த மீன் உணவு திருவிழாவை குமாரி மட்டுமில்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்த வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. முன்பாக மீனவ பெண்கள் சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.


Tags : Kanyakumari , Kanyakumari, fisherwoman, whimsy, food festival, audience delight
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...