×

சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் இறந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல்

சோமாலியா: சோமாலியாவில்  40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலவும் பஞ்சம், கடந்த ஆண்டு மட்டுமே பஞ்சத்தால் 43,000 பேர் இறந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க தீபகற்பத்தில்  வறட்சியால் அறிவிக்கப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை இதுவாகும். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் குறைந்தது 18,000 பேர் மற்றும் 34,000 பேர் இறப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. திங்களன்று உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிறுவனம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில், சோமாலியா மற்றும் அண்டை நாடுகளான எத்தியோப்பியா மற்றும் கென்யா ஆகியவை தொடர்ந்து 6 ஆண்டுகளாக மழை இல்லாமல் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் உலகளாவிய உணவு விலைகளின் உயர்வு மற்றும் உக்ரைன் போர் உள்ளிட்டவற்றால்  நெருக்கடியை அதிகரித்துள்ளது. ஆனால் அந்த நாட்டில் மட்டும் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினி கிடப்பதால் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளதாக கூறப்படுகிறது. வறட்சியால் உணவு பற்றாக்குறை, காலரா போன்ற நோய்களுடன்  ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்பட்டு இறப்பு விகிதம் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10,000 பேரில் இரண்டு பேர் ஒவ்வொரு நாளும் இறக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்மேற்கு சோமாலியாவில் உள்ள பே மற்றும் பகூல் மற்றும் தலைநகர் மொகடிஷுவிற்கு இடம்பெயர்ந்த மக்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  கிழக்கு ஆபிரிக்காவின் துணை நிறுவனமான அல்-ஷபாப் உடன் சோமாலியா ஆயிரக்கணக்கான போராளிகளுடன் போரிடுவதால், காலநிலை மாற்றம் மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றால் பல்லாயிர கணக்கான கால்நடைகளும் இறந்துள்ளன. 3.8 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா. இடம்பெயர்வு நிறுவனம் கூறுகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டில், சோமாலியாவில் கிட்டத்தட்ட அரை மில்லியன் குழந்தைகள் இந்த ஆண்டு கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.


Tags : Somalia ,World Health Organization , Somalia, famine, 43,000 dead, World Health Organization reports
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...