×

விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை: தமிழக அரசு தகவல்

சென்னை: நிலமற்ற பட்டியலின மக்களுக்கு அரசு சார்பில் தருவதற்காக ஒதுக்கப்படுவது பஞ்சமி நிலம் என அழைக்கப்படுகிறது. விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பஞ்சமி நிலம்  என்பது நிலமற்ற பட்டியல் இன ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, ஒதுக்கப்பட்ட வேளாண் விளைநிலங்கள் ஆகும்.

இந்த நிலையில், பஞ்சமி நிலங்கள் குறித்து கருப்பசாமி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், கன்னியாகுமரி, ஆகிய 5 மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை என்றும்,  திருப்பூர், தருமபுரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒருசில வட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை  என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Tags : Panchami ,Virudhunagar ,Ramanathapuram ,Pudukottai ,Tiruvarur ,Kanyakumari ,Tamil Nadu , There are no Panchami lands in 5 districts namely Virudhunagar, Ramanathapuram, Pudukottai, Tiruvarur, Kanyakumari: Tamil Nadu Government Information
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...