திருவண்ணாமலை அடுத்த மல்லவாடியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு வாரச்சந்தை தொடக்கம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த மல்லவாடி கிராமத்தில், கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு வாரச்சந்தை நேற்று முன்தினம் தொடங்கியது.

திருவண்ணாமலை அடுத்த மல்லவாடி கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர சந்தை நடைபெறுவது வழக்கம். அதில், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், காய்கறி உள்ளிட்டவைகள் விற்பனை நடைபெறும்.

இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் தொடங்கிய பிறகு, கடந்த 3 ஆண்டுகளாக சந்தை நடைபெறாமல் முடங்கியிருந்தது. இந்நிலையில், மீண்டும் நேற்று முன்தினம் சந்தைமேட்டு பகுதியில் வாரச்சந்தை செயல்பட தொடங்கியது.

அதையொட்டி, சந்தையில் வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு, சிறப்பு டோக்கன் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் நடந்த குலுக்கலில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல் பரிசாக கன்றுக்குட்டி, இரண்டாவது பரிசாக வெள்ளாடு, மூன்றாவது பரிசாக கோழி வழங்கப்பட்டது.

Related Stories: