×

உழைப்புக்கு மரியாதை இல்லை!: செங்கல்பட்டு மாவட்ட பாஜக பெண் நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தனர்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட பாஜக பெண் நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தனர். பாஜகவில் உழைக்கும் மகளிர் நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை என்பதால் அதிமுகவில் இணைந்ததாக விளக்கம் அளித்துள்ளனர். பீர்க்கன்கரணையில் பா.ஜ.க. பெண் நிர்வாகிகள் 100 பேர், அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். செங்கல்பட்டு மாவட்ட பாஜக துணைத் தலைவர் கங்காதேவி சங்கர் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவில் இணைவோரை துரோகி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பதா என்று பெண் நிர்வாகிகள் ஆவேசமாக தெரிவித்தனர்.

அண்ணாமலையைச் சுற்றித்தான் துரோகிகள் இருக்கிறார்கள் என்று பெண் நிர்வாகிகள் பேட்டியளித்தனர். பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் நிர்வாகிகள் இணைவது தொடர்வதால் அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் தொடர்கிறது. பாஜகவில் இருந்து விலகி மேலும் பல நிர்வாகிகள் அதிமுகவுக்கு வருவார்கள். கட்சி நிர்வாகிகளின் குறைகளை அண்ணாமலை கேட்டறிவதில்லை என்று அதிமுகவில் இணைந்த பெண் நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கட்சி நிர்வாகிகளின் கருத்தை அண்ணாமலை கேட்க மறுப்பதே நிர்வாகிகள் விலகலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

Tags : Chengalpattu district ,BJP ,AIADMK , Chengalpattu District BJP Women Executives, ADMK joined
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...