×

புதிய வகை கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; மராட்டியம், குஜராத், கேரளா, கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் 2 மாதம் முன்பு தினசரி தொற்று 2 என்ற எண்ணிக்கையில் இருந்தது. உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா தற்போது பரவி வருகிறது. புதிய வகை கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை. துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒருநாளில் 2 என்ற அளவில் இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.


Tags : Minister ,M. Subramanian , The new type of corona has not affected much: Minister M. Subramanian interview
× RELATED நீட் தேர்வில் குழப்பம், குளறுபடி தேசிய...