×

இலவச மின்சாரம் கேட்டு ஒடிசாவில் விவசாயிகள் போராட்டம்: போலீஸ் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஊர்வலம்

ஒடிசா: இலவச மின்சாரம் கேட்டு ஒடிசாவில் போராட்டம் நடத்திய விவசாயிகள் போலீஸ் தடுப்புகளை மீறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. புவனேஸ்வர் நகரில் தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகளை ஆயுதப்படை போலீசார் தடுத்தி நிறுத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தடுப்புகளை உடைத்து கொண்டு விவசாயிகள் சென்றதால் போலீசார் செய்வதறியாது தவித்தனர்.

சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மின்சாரத்தை தனியார் மயமாக்க நவீன் பட்நாயக் அரசு முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினர். அண்டை மாநிலமான தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் போது ஒடிசாவில் ஏன் அந்த திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பினர்.


Tags : Odisha , Free electricity, farmers strike in Odisha, barricade-breaking procession
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை