3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு

சென்னை: மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு நாளை பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: பெல்ஸ்சாலை இந்த சாலையை தற்காலிக ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு வாலாஜாசாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து என்ட்ரி ஆகவும், பாரதி சாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒருவழிப்பாதையாகவும் செயல்படுத்தப்படும். பின்பு கிரிக்கெட் விளையாட்டு முடிந்தவுடன் மேற்க்கண்ட போக்குவரத்து முறை எதிர்பதமாக மாற்றி செயல்படுத்தப்படும்.

காமராஜர் சாலையில் இருந்து பாரதிசாலை நோக்கிவரும் வாகனங்களில் எம்டிசி மற்றும் உரிய அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. இந்த சாலை பாரதிசாலையில் இருந்து என்ட்ரி ஆகவும், வாலாஜா சாலையில் இருந்து ஒருவழிப்பாதையாகவும் செயல்படுத்தப்படும். அண்ணாசாலையில் இருந்து வரும் எம், பி, டி, டபள்யூ ஆகிய எழுத்துக்கள் கொண்ட அனுமதி அட்டைகள் உடைய வாகனங்கள் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, பாரதி சாலை மற்றும் கெனால்ரோடு வழியாக அந்தந்த வாகன நிறுத்தும் இடங்களுக்கு சென்றடையலாம்.

பி மற்றும் ஆர் ஆகிய எழுத்துக்கள் கொண்ட அனுமதி அட்டைகள் உடைய வாகனங்கள் வாலாஜா சாலை வழியாகவே சென்று அந்தந்த வாகன நிறுத்தும் இடங்களுக்கு சென்றடையலாம். போர் நினைவுச் சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் எம், பி, டி, டபள்யூ ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகனங்கள் மற்றும் எம்டிசி ஆகியவை பாரதிசாலை வழியாக கெனால்ரோடுக்கு சென்று அந்தந்த வாகன நிறுத்தங்களுக்கு சென்றடையலாம். அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் அனைத்தும் பி.டபள்யூ.டி எதிராக உள்ள கடற்கரை உட்புறச் சாலையில் வாகனங்களை நிறுத்தலாம்.

அண்ணாசாலையில் இருந்து வரும் இருசக்கரவாகனங்கள் மற்றும் கார்கள் வாலாஜா ரோடு, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக சென்று கடற்கரை உட்புறச்சாலைக்கு சென்று வாகனங்களை நிறுத்தலாம். போர் நினைவுச் சின்னத்தில் இருந்து வரும் வாகனங்கள், காமராஜர் சாலை வழியாக சென்று பி.டபள்யூ.டி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள கடற்கரை உட்புறச் சாலைக்கு சென்று வாகனங்களை நிறுத்தலாம். காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று பி.டபள்யூ.டி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள கடற்கரை உட்புறச்சாலைக்கு சென்று வாகனங்களை நிறுத்தலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: