×

கவிதாவிடம் 10 மணிநேரம் அமலாக்கத்துறை விசாரணை

புதுடெல்லி:  டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேட்டில் தெலங்கானா முதல்வரின் மகளும், எம்எல்சியுமான கவிதாவுக்கு தொடர்புள்ளதாக கூறி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. இது தொடர்பாக கடந்த 11ம் தேதி கவிதா டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

அவரிடம்  சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.  இதனை தொடர்ந்து 2வது முறையாக நேற்று கவிதா விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். 10 மணி நேரம் நடந்த விசாரணையின்போது கவிதாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.



Tags : Kavita ,Enforcement Directorate , Kavita was interrogated by the Enforcement Directorate for 10 hours
× RELATED அமலாக்கத்துறைக்கு எதிராக தெலுங்கானா...